Thursday, June 4, 2009

பெற்றோரின் கவனத்திற்கு. .




சில தினங்களுக்கு முன் நான் ஒரு நாளிதழில் படித்தது. படித்ததும் அதிர்ந்து போன ஒரு செயலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...


துள்ளி விளையாடும் விளையட்டுதனம் மாறாத ஒரு குட்டிபெண் ...பெற்றோரின் செல்ல பெண்னும் கூட ... L . K . G படித்துகொண்டிருக்கிறாள்...


வழக்கம் போல் காலைநேர பரபரப்புடன் SCHOOLVAN வநதுவிடுமே என்ற கலக்கத்துடன் அக்குழந்தையை கிளப்பிவிட்டு கொண்டிருந்தாள்... அவளின் தாய்...அவசரத்தில் அக்குழந்தைக்கு "Sticker பொட்டு” எடுத்து நெற்றியில் ஒட்டி அனுப்பிவிட்டார் தாய்... L . K . G படிக்கும் சின்னபிள்ளைதானே அவள்.,, பள்ளிகூடத்தில் அப்பா , அம்மா வை தேடி அழுதிருக்கிறாள்... கண்ணை கசக்கிகொண்டு . . அவளின் கெட்டநேரமோ என்னவோ அவள் நெற்றியிலிருந்த “ ஸ்டிக்கர் பொட்டு” அவள் கண்ணை கசக்கி அழும்பொழுது கண்ணிர்க்குள் சென்று விட்டதாம். . கண்ணில் வலி ஏற்பட கத்தி கதறியிருக்கிறாள் குழந்தை. . பாவம். . . எதற்கு குழந்தை இப்படி அழுகிறாள் எனத் தெரியாமல் வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டனர் ஆசிரியர்கள்.. கண் வலிப்பதாக கூறி அழும் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகு தான் தெரிந்திருக்கிறது விபரீதம்... அதாவது “ஸ்டிக்கர் பொட்டு” கண்ணுக்குள் சென்ற விஷயம். . ஆப்ரேஷன் ஒன்று தான் இதற்கு தீர்வு எனவும் கூறிவிட்டார் மருத்துவர்.. . கதறி அழுதனர் பெற்றோர்.என்ன செய்ய முடியும்.. .

தேவையா இது???

பெற்றோர்களே உங்கள் செல்லபிள்ளை வளரும் வரை இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கூட மிகுந்த கவனம் தேவை. .

3 comments:

  1. மிக நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.

    அருமை..

    ReplyDelete
  2. ஸ்டிக்கர் பொட்டில் இப்படியொரு சிக்கல் இருக்கிறதா?

    ReplyDelete