Saturday, June 13, 2009

குழந்தை நலனுக்கு பெற்றோர் செய்ய வேண்டியது..

நம் குழந்தையின் நலனுக்காக நாம் செய்ய வேண்டிய சில சின்ன சின்ன செயல்களை நினைவூட்டவே இப்பதிவு1. குழந்தை பிறந்து சில நாட்களுக்கு தாய்க்கும் , குழந்தைக்கும் ஒய்வு கொடுப்பது மிக மிக அவசியம். குட்டி பாப்பா 23 மணி நேரம் நன்றாக தூங்கினால் அதன் உடல் நலத்திற்க்கு அது மிகுந்த ஆரோக்கியத்தை தரும்.2. பாப்பா பிறந்து சில தினங்களுக்கு பிறகே மற்றவர்கள் தூக்கி கொஞ்ச அனுமதிக்கவும். [அவசியங்களுக்கு தவிர]. இதுவே நம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.


3. குழந்தைக்கு பெற்றோர்கள்தாம் “முன் மாதிரி”. ஆகையால் முதலில் பெரியவர்களாகிய நாம் நம் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
குறிப்பாக இரவு 12 மணி வரை டிவி பார்பது, தாமதமாக எழுவது, அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.


4.சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு ஊட்டும் பழக்கத்தை நிறுத்துங்கள் . ஏனெனில் அவ்வாறு செய்வதால் குழந்தைக்கு சாப்பாட்டைக் கண்டாலே ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விடும். சாப்பாடு வேண்டும் எனக் குழந்தைகளே கட்டாயமாக கேட்பார்கள். அது வரை பொறுமை காப்பது நல்லது. நம் குழந்தை சாப்பிடாமல் இருப்பதை பார்க்க வேதனையாகதான் இருக்கும், ஆனால் வலுகட்டாயமாக அவர்கள் உட்கொள்ளும் உணவுகள் அவர்களின் உடம்பில் சேராது என்பது உண்மையே. வீட்டில் மற்றவர்கள் சாப்பிடும் பொழுது அவர்களைப் பார்த்து குழந்தைகளை சாப்பிடும்படி கூறி அவர்களுக்கும் தனியாக பரிமாறுங்கள். நிச்சயம் நன்றாக சாப்பிட பழகிவிடுவார்கள் சீக்கிரமே.5.குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். அது மிக பெரிய தவறு . அவர்களிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தால் அவர்கள் ஒவ்வொரு செயல்களை செய்து முடிக்க அது பயன் படும். அவர்களும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தங்கள் முழு ஈடுபாட்டை காட்டுவார்கள். .அதில் வெற்றியும் பெறுவார்கள்.


6.குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பதும், அதிக கண்டிப்பு இல்லாது வள்ர்ப்பதும் இரண்டுமே தவறுதான். அதிக கண்டிப்பு பயத்தை தரும், கண்டிப்பின்மை மற்றவரை மதிக்காமல் நடக்கும் பழக்கத்தை உருவாக்கி விடும். ஆகையால் உங்கள் செல்ல்ங்களை கண்டிப்புடன் அரவணைத்துக்கொள்ளுதல் அவசியம்.

7. அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் அடி பணியக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடித்தால் அவர்களை அடிக்கவோ, அதட்டவோ வேண்டாம். சற்றே கண்டுகொள்ளாது விடுங்கள். இது பெற்றோர்க்கு கடினமானதுதான் எனினும் முயற்ச்சித்து பாருங்களேன். வெற்றி கிட்டும். அழுவதால் எதுவும் கிடைக்காது என அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிறகு அவர்கள் அழுகை அடங்கியதும் அமைதியுடனும், அன்புடனும் அவர்கள் தவறை சுட்டிகாட்டுங்கள். உங்கள் அன்பு செல்லங்கள் கண்டிப்பாக மாற்றி கொள்வார்கள் தங்கள் பிடிவாதத்தை.


குழந்தையின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அதிகம் என்பதை முதலில் ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும் .

உங்கள் செல்லத்தின் வாழ்வு உங்கள் கையில்!!!!

12 comments:

 1. அருமையான தகவல் பகிர்வு...

  தொடர்ந்து எழுதுங்கள்...

  குழந்தை வளர்ப்பு குறித்த உபயோகமான தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி..

  ReplyDelete
 2. நல்ல இடுகை. தமிழ்மந்த்தில் பதிவிட்டால் நிறையபேர் பார்ப்பார்கள்!!

  ReplyDelete
 3. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-புத்தம்புதிய அழகிய templates
  3-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  ReplyDelete
 4. //குழந்தை வளர்ப்பு குறித்த உபயோகமான தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி..//

  ரிப்பீட்டோய்...!

  ReplyDelete
 5. நன்றி கண்ணா.. தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்..
  கட்டாயமாக எழுதுகிறேன்.. தொடர்ந்து படித்து வாழ்த்துங்கள்..

  ReplyDelete
 6. நன்றி தேவன்மயம்.. கட்டாயம் தமிழ்மனத்தில் இணைத்துகொள்கிறேன்..

  ReplyDelete
 7. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல தமிழினி..

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் லொல்லு சபா.. தொடர்ந்து வாழ்த்துங்கள்..

  ReplyDelete
 9. //குழந்தை வளர்ப்பு குறித்த உபயோகமான தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி..//

  ரிப்பீட்டோய்...!

  ReplyDelete
 10. நல்ல பதிவு... ஒவ்வொ குழந்தையும் ரொம்ம்ம்ம்ப அழகு :-)

  உங்கள் சிறகுகள் வானத்து எட்ட வாழ்த்துகள்

  ReplyDelete
 11. நன்றி மேனகா, தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும்

  ReplyDelete
 12. நன்றி ஹர்ஷினி அம்மா.. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...

  ReplyDelete