
பெண் என்பவள் பிறப்பெடுத்த பின் அவளின் வாழ்வே விழாக்கோலம் பூண்டுவிடுகிறது... பெண் குழந்தையென்றாலே சுமையாக கருதி “சிசு வதை” செய்து வந்த நம் சமூகம் இன்று நிறைய மாற்றங்களை சந்தித்துவிட்டது . எங்கோ சில இடங்களில் மட்டும் இது நீடிக்கிறது என்பது வேதனையே. .
இன்றைய “அப்பாக்கள்” பெண் குழந்தையை கொண்டாடி மகிழ்கின்றனர். தங்களுக்கு பெண் உருவில் தேவதை பிறந்து விட்டதாக சந்தொஷிக்கின்றனர்... வித விதமாக அவர்களை அலங்கரித்து பார்ப்பதில் தொடங்குகிறது பெண்ணின் அழகான விழாகாலங்கள்....
முதல் பண்டிகை....
சிறுமியாக வண்ண வண்ண உடைகளோடு உலா வந்த தேவதை முதன் முதலாக வெட்கப்படும் திருவிழா அரேங்கேறும்.. ....அவளின் தாவணிப் பருவம்....... அப்பா அம்மாவின் மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தும் என்பது உணர்வுபூர்வமான உண்மையே ....
இக்காலப் பெற்றோர்க்கும் தங்கள் பெண்னை தாவணியில் பார்ப்பது என்பது அலாதி பரவசமே.....
சிறுமி மலர்ந்து பருவமங்கையாய் வலம் வருவதே பெண்ணின் முதல் பண்டிகை.....
மண விழா காணும் மங்கை...

மணக்கோலம் பூண்டு மனைவியாய் பதவி உயர்வு பெற்று நிற்கும் பெண் காணும் விழா “மங்களகரமான விழா” ... ஒவ்வொரு பெண்னும் கனவு காணும் இனிய விழா....
திருமணம் என்றாலே ஆணும் பெண்ணும் முக்கிய பங்குதாரர்கள் தான்.. எனினும் பெண் ஏற்க்கும் பொறுப்பு சற்று கூடுதலே........
பட்டு புடவை , கண் கவரும் நகைகள் , கை மணக்கும் மெகந்தி ...... அதிமுக்கியமாக முகம் நிறைந்த வெட்கங்களுடன் மணப்பெண்ணின் விழா களை சற்று அதிகமாகவே தெரியும். . . அந்நாள் முழுவதுமே பெண்ணிடம் தெரியும் பூரிப்பு தனி அழகு தான்...
மங்கை மனைவியான பெருமிதத்தோடு இனிதே நிறைவுறும் அவ்விழா.....
வளைகாப்பு...
ஒரு பெண் மிக அழகாக ஜொலிப்பது நிச்சயமாக இவ்வளைகாப்பு திருவிழாவில் தான்... எந்த ஒரு பொறுப்பில் சமூகத்தில் உயர்ந்தாலும் “தாய்மை” அடையும் பொழுது பெண்ணிற்கு தனி மரியாதை கிடைத்துவிடுகிறது.... தாயானதும் பெண் சாந்தமும் மனநிறைவு பெற்றுவிடுவதால் கூடுதல் மெருகேறி விடுகிறது....
கையில் நிறைய வளையல்கள் அடுக்கி கொண்டு கண்ணிற்க்கு நிறைவாக மாறி விடுவாள்...வயிற்றில் இருக்கும் தங்கள் செல்லத்தின் கூடுதல் நினைவுடன் வளையோசை சங்கிதம் பாட அவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் இருப்பது போல் பாவனை செய்துகொண்டு வாழும் “தாய்” தான் இவ்வுலகின் மிகவும் இனிமையான பண்டிகையை கொண்டாடுபவள்......
“ மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட தான் வேண்டும்”
இவ்வாறு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து விழாக்களாக கொண்டாடும் பாக்கியம் பெண்களுக்கே . . .
{ மொக்கையை நிதானமாக படித்தமைக்கு நன்றிகள் பல..}

2. பாப்பா பிறந்து சில தினங்களுக்கு பிறகே மற்றவர்கள் தூக்கி கொஞ்ச அனுமதிக்கவும். [அவசியங்களுக்கு தவிர]. இதுவே நம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
3. குழந்தைக்கு பெற்றோர்கள்தாம் “முன் மாதிரி”. ஆகையால் முதலில் பெரியவர்களாகிய நாம் நம் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
4.சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு ஊட்டும் பழக்கத்தை நிறுத்துங்கள் . ஏனெனில் அவ்வாறு செய்வதால் குழந்தைக்கு சாப்பாட்டைக் கண்டாலே ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விடும். சாப்பாடு வேண்டும் எனக் குழந்தைகளே கட்டாயமாக கேட்பார்கள். அது வரை பொறுமை காப்பது நல்லது. நம் குழந்தை சாப்பிடாமல் இருப்பதை பார்க்க வேதனையாகதான் இருக்கும், ஆனால் வலுகட்டாயமாக அவர்கள் உட்கொள்ளும் உணவுகள் அவர்களின் உடம்பில் சேராது என்பது உண்மையே. வீட்டில் மற்றவர்கள் சாப்பிடும் பொழுது அவர்களைப் பார்த்து குழந்தைகளை சாப்பிடும்படி கூறி அவர்களுக்கும் தனியாக பரிமாறுங்கள். நிச்சயம் நன்றாக சாப்பிட பழகிவிடுவார்கள் சீக்கிரமே.
5.குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். அது மிக பெரிய தவறு . அவர்களிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தால் அவர்கள் ஒவ்வொரு செயல்களை செய்து முடிக்க அது பயன் படும். அவர்களும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தங்கள் முழு ஈடுபாட்டை காட்டுவார்கள். .அதில் வெற்றியும் பெறுவார்கள்.
6.குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பதும், அதிக கண்டிப்பு இல்லாது வள்ர்ப்பதும் இரண்டுமே தவறுதான். அதிக கண்டிப்பு பயத்தை தரும், கண்டிப்பின்மை மற்றவரை மதிக்காமல் நடக்கும் பழக்கத்தை உருவாக்கி விடும். ஆகையால் உங்கள் செல்ல்ங்களை கண்டிப்புடன் அரவணைத்துக்கொள்ளுதல் அவசியம்.
7. அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் அடி பணியக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடித்தால் அவர்களை அடிக்கவோ, அதட்டவோ வேண்டாம். சற்றே கண்டுகொள்ளாது விடுங்கள். இது பெற்றோர்க்கு கடினமானதுதான் எனினும் முயற்ச்சித்து பாருங்களேன். வெற்றி கிட்டும். அழுவதால் எதுவும் கிடைக்காது என அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிறகு அவர்கள் அழுகை அடங்கியதும் அமைதியுடனும், அன்புடனும் அவர்கள் தவறை சுட்டிகாட்டுங்கள். உங்கள் அன்பு செல்லங்கள் கண்டிப்பாக மாற்றி கொள்வார்கள் தங்கள் பிடிவாதத்தை.

